பச்சை அரிசி கிலோ 300 ரூபாய்! பஸ்ஸுக்கு 250 ரூபாய் : மக்கள் கடும் விசனம்
தைப்பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் தயாரிக்க பச்சை அரிசி கிடைக்காததால் புத்தாண்டு முதல் பண்டிகையை கொண்டாட முடியாமல் தவிப்பதாக பலாங்கொடை பிரதேச தோட்ட மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் மக்கள் தெரிவிக்கையில்,
தமிழ் மக்களின் புத்தாண்டு கொண்டாட்டங்களில் தைப்பொங்கல் பண்டிகை முக்கியமானது, எனினும், பலாங்கொடை பிரதேசத்தில் இந்த நாட்களில் அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அரிசிக்கான விலை...
இந்த நிலையில், ஓரிரு கிலோ வாங்க, அதுவும் முன்னூறு ரூபாய் வரை அதிக விலை கொடுத்து வாங்க, ஊரில் சில கடைகள் காணப்படுகின்றன.
மேலும், பஸ் கட்டணமாக 200 - 250 ரூபாய் செலுத்தி வட்டுகரையில் இருந்து ஊருக்கு சென்று ஒரு கிலோ கிராம் அரிசியை கொள்வனவு செய்யும் போது, 450 ரூபாவாக முடிகின்றது என தோட்டமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |