க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் : 50க்கும் அதிகமானோர் கைது!
க்ளீன் ஸ்ரீலங்கா(Clean Sri Lanka) வேலைத்திட்டத்திற்கமைய, முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் சோதனைகளில் இதுவரையில் 56 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களுத்துறை வடக்கு மற்றும் பாணந்துறை - மோதரவில ஆகிய பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினரும் இணைந்து இந்த சுற்றிவளைப்புகளை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள்
இதன்படி, களுத்துறை பகுதியிலுள்ள தொடர்மாடி குடியிருப்புத் தொகுதியொன்றில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் பல்வேறு போதைப்பொருட்களுடன் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், பாணத்துறை – மோதரவில பகுதியிலுள்ள குடியிருப்பு தொகுதியொன்றில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில், போதைப் பொருட்களுடன் 35 பேர் கைதாகியுள்ளனர்.
இதேவேளை, க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் இன்றைய தினம் வாத்துவ கடற்கரையைத் தூய்மைப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுத்தமான இலங்கை
மேலும், குறித்த பணிகளை பாணந்துறை பிரதேச சபை அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.
இந்த நிலையில், கொழும்பு புறக்கோட்டை நகரை சுத்தம் செய்யும் பணிகளைப் புறக்கோட்டை வர்த்தக சங்கத்தினரும் சமுதாய பொலிஸ் பிரிவினரும் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |