நற்பிட்டிமுனையில் மாபெரும் இரத்ததான முகாம்
உதிரம் கொடுத்து உயிர் காப்போம் என்ற தொனிப் பொருளின் அடிப்படையில் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையுடன் இணைந்து நற்பிட்டிமுனை சமூக சேவைகள் மற்றும் அபிவிருத்திக்கான ஒன்றியத்தின் சுகாதாரப் பிரிவினால் மாபெரும் இரத்ததான முகாம் ஒனறு ஏற்பாடு செய்யப்பட்டு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த இரத்ததான முகாமானது நற்பிட்டிமுனை கமு/கமு/அல் -அக்ஸா மத்திய மகா வித்தியாலய ஆராதனை மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
மேலும், இது நற்பிட்டிமுனை சமூக சேவைகள் மற்றும் அபிவிருத்திக்கான ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் வீ.ரீ.கனூன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இரத்ததான முகாம்
மாபெரும் இரத்ததான முகாமில் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகள் மற்றும் சக உத்தியோகத்தர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.
இந்த மாபெரும் இரத்ததான முகாமில் நற்பிட்டிமுனை சமூக சேவைகள் மற்றும் அபிவிருத்திக்கான ஒன்றியத்தின் உயர்பீட உறுப்பினர்கள், அங்கத்தவர்கள் மற்றும் பிரதேசத்திலுள்ள பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |