சீமெந்து விலை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
Sri Lankan Peoples
Cement Price in Sri Lanka
Harsha de Silva
Economy of Sri Lanka
Money
By Rakshana MA
இலங்கையில் சீமெந்து மீதான செஸ் வரியைக் குறைப்பதற்கு நிதி அமைச்சின் அதிகாரிகள் முன்வைத்த யோசனைக்கு அமைய இலங்கை அரசாங்க நிதி பற்றிய குழுவின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா(Harsha de Silva) தலைமையிலான அரசாங்க நிதி பற்றிய குழு, கடந்த 8ஆம் திகதி நாடாளுமன்றத்தில் கூடியபோது இந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
மூடை சீமெந்து...
இதன்படி, ஒரு கிலோ கிராம் சீமெந்தின் விலை ஒரு ரூபாவால் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒரு மூடை சீமெந்து விலை 100 ரூபாவால் குறையும் என்று நிதி அமைச்சக அதிகாரிகள் குழுவிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |