சம்மாந்துறையில் மின்சாரம் தாக்கியதில் ஒருவர் மரணம்
சம்மாந்துறை(Sammanthurai) பிரதேசத்திற்குட்பட்ட பகுதியில், வழமையான செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த நிலையில் மின்சாரம் தாக்கி நபர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்று(13) அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
மேலும், இந்த மின்சாரத் தாக்குதலில் சிக்குண்டு நபர் 60 வயதுடைய குடும்பஸ்தர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
இந்த நிலையில், மரணமடைந்தவரின் சடலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு, மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இவ்வாறு மரணமடைந்தவர் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு சென்னக்கிராமம் பகுதி மலையடிக்கிராமம் 03 பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |