ஏறாவூரில் கிணற்றில் வீழ்ந்து இரண்டு வயது குழந்தை

Sri Lanka Police Batticaloa Eastern Province
By Rakshana MA Jan 14, 2025 05:44 AM GMT
Rakshana MA

Rakshana MA

மட்டக்களப்பு(Batticaloa) - ஏறாவூர் பகுதியில் இரண்டு வயது பெண் குழந்தை ஒன்று கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று(13) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஏறாவூர் இரண்டாம் பிரிவு மக்காமடி வீதியைச் சோந்த முகமட் ஷரகீர் ஜப்பிரா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது

திறைசேரி உண்டியல்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவித்தல்

திறைசேரி உண்டியல்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவித்தல்

விசாரணை 

குறித்த பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றில் உள்ள கிணற்றில் அருகில் கதிரை ஒன்று வைக்கப்பட்டிருந்ததுடன், நேற்று பிற்பகல் 3 மணியளவில் குறித்த குழந்தை வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த போது கிணற்றுக்கு அருகில் வைத்திருந்த கதிரையில் ஏறி கிணற்றை எட்டிப்பாத்த நிலையில் கிணற்றுக்குள் தவறி வீழ்ந்துள்ளது.

ஏறாவூரில் கிணற்றில் வீழ்ந்து இரண்டு வயது குழந்தை | 2 Year Old Child Died After Falling Well In Eravur

இந்த நிலையில் மாலை 6.00 மணியளவில் குழந்தையை காணவில்லை என பெற்றோர் தேடிய நிலையில் கிணற்றுக்குள் குழந்தை வீழ்ந்து கிடப்பதை கண்டு உடனடியாக குழந்தையை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதணையடுத்து குழந்தையை பிரேத பரிசோதைனைக்காக வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பெற்றோரின் கவனயீனத்தால் குழந்தை உயிரிழந்துள்ளது என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், இது தோடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

களுவாஞ்சிக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப்பொதி வழங்கி வைப்பு

களுவாஞ்சிக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப்பொதி வழங்கி வைப்பு

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்துமத கைதிகளை பார்வையிட விசேட அனுமதி

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்துமத கைதிகளை பார்வையிட விசேட அனுமதி

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGallery