மட்டக்களப்பில் 40 வருடங்களுக்கு பிறகு ஆரம்பிக்கப்பட்ட பேருந்து சேவை

Batticaloa Anura Kumara Dissanayaka Sri Lankan Peoples Eastern Province Clean Sri lanka
By Rakshana MA Jan 13, 2025 11:31 AM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் "க்ளீன் ஸ்ரீ லங்கா" வேலைத்திட்டத்திற்கு அமைய 40 வருடங்களாக பேருந்து போக்குவரத்து இல்லாத மாவலியாறு பிரதேசத்திற்கு பேருந்து சேவை வழங்கப்பட்டுள்ளதுடன் மயிலம்பாவலி கிராமத்தில் பிரதான வீதியில் வாராந்த சந்தை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த செயற்றிட்டமானது, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்காவின்(Anura Kumar Dissanayake) எண்ணக் கருவிலே தோற்றம் பெற்ற "க்ளீன் ஸ்ரீ லங்கா" வேலை திட்டத்தின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்துமத கைதிகளை பார்வையிட விசேட அனுமதி

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்துமத கைதிகளை பார்வையிட விசேட அனுமதி

மக்களின் தேவை 

மேலும், இந்த கிராமத்தை சுற்றி தன்னாமுனை, சவுக்கடி, தளவாய் விபுலானந்தபுரம், ஆறுமுகத்தான் குடியிருப்பு என பல கிராமங்கள் காணப்படுகின்றன. இங்குள்ள மக்கள் சந்தை வசதிக்காக 5 கிலோ மீட்டருக்கு அதிகமாக செல்ல வேண்டிய தேவையும் காணப்படுகின்றது.

மட்டக்களப்பில் 40 வருடங்களுக்கு பிறகு ஆரம்பிக்கப்பட்ட பேருந்து சேவை | A Weekly Market Opened In Batticaloa

இந்த நிலையில், சந்தை திறக்கப்பட்டதை தொடர்ந்து அனைத்து கிராம மக்களும் இலகுவில் சென்று பொருட்களை குறைந்த விலையில் பெற்றுக்கொள்ளக்கூடிய சந்தர்ப்பங்களை தற்போது உருவாக்கிக் கொடுத்திருக்கின்றது.

மேலும், அந்த ஊரிலே உற்பத்தி  செய்கின்ற விவசாய பொருட்கள் சந்தைப்படுத்தக் கூடிய வாய்ப்பும் உருவாக்கப்பட்டுள்ளதுடன்,  தன் மூலம் சாதாரண மக்கள் பெரிதும் பயனடைவதாக மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பச்சை அரிசி கிலோ 300 ரூபாய்! பஸ்ஸுக்கு 250 ரூபாய் : மக்கள் கடும் விசனம்

பச்சை அரிசி கிலோ 300 ரூபாய்! பஸ்ஸுக்கு 250 ரூபாய் : மக்கள் கடும் விசனம்

நான்கு நாள் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி அநுர குமார

நான்கு நாள் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி அநுர குமார

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery