இலங்கையின் கல்வி சீர்திருத்தத்திற்கு வெளியாகும் எதிர்ப்புகள்

Ministry of Education Sri Lankan Peoples Sri Lankan Schools Education
By Rakshana MA Jul 21, 2025 05:13 AM GMT
Rakshana MA

Rakshana MA

நாட்டில் முன்னெடுக்கப்ட்டிருந்த கல்வி மறுசீரமைப்பானது, மாணவர்களின் சுமைகளை குறைப்பதற்கு பதிலாக இன்னும் அதிகரிக்கும் என ஆசியர்கள் சங்கம் கடுமையான கவலைகளை தெரிவித்துள்ளது.

மறுசீரமைப்பு அவசியம் என்றாலும், அரசாங்கத்தின் முன்மொழியப்பட்ட மாற்றங்கள் 2018 ஆம் ஆண்டின் மறுசுழற்சி செய்யப்பட்ட யோசனைகள் என்றும், புதுமைகள் எவையும் இல்லாதவை என்றும் அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கல்வி நிபுணர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் போன்ற முக்கிய பங்குதாரர்களுடன் கலந்தாலோசிக்காமல் மறுசீரமைப்பை முன்னெடுப்பதாக அரசாங்கத்தையும் விமர்சித்துள்ளார்.

46 ஆண்டுகளாக தமிழர்களை அடக்குமுறையில் வைத்திருக்கும் சட்டம்!

46 ஆண்டுகளாக தமிழர்களை அடக்குமுறையில் வைத்திருக்கும் சட்டம்!

கல்வி சீர்திருத்தம் 

மேலும், பாடசாலை நேரங்களின் ஆலோசிக்கப்படாத நீடிப்பை எடுத்துக்காட்டிய அவர், நிபுணர் ஆலோசனையின் அடிப்படையில் மாணவர்களை மையமாகக் கொண்ட திட்டமிடலின் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையின் கல்வி சீர்திருத்தத்திற்கு வெளியாகும் எதிர்ப்புகள் | Education Reform Sri Lanka Teachers Oppose

அதேவேளை, ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் கல்விக் கட்டண அதிகரிப்பு போன்ற பிரச்சினைகள் புறக்கணிக்கப்படுவதாகவும், அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அப்பால் ஆராய்ச்சி மற்றும் உண்மையான தேவைகளின் அடிப்படையில் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

இஸ்ரேல் தலைநகரில் ஏவுகணைத் தாக்குதல் - ஹவுதிகள் பொறுப்பேற்பு

இஸ்ரேல் தலைநகரில் ஏவுகணைத் தாக்குதல் - ஹவுதிகள் பொறுப்பேற்பு

நோயைப் படைத்தவனே மருந்தையும் படைத்தான்

நோயைப் படைத்தவனே மருந்தையும் படைத்தான்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW