இஸ்ரேல் தலைநகரில் ஏவுகணைத் தாக்குதல் - ஹவுதிகள் பொறுப்பேற்பு

By Raghav Jul 20, 2025 09:19 AM GMT
Raghav

Raghav

இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவில் உள்ள விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலுக்கு, யேமனின் ஹவுதி கிளர்ச்சிப்படை பொறுப்பேற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

டெல் அவிவ் இல் உள்ள பென் குரியன் பன்னாட்டு விமான நிலையத்தின் மீது நேற்று முன்தினம் (18)இரவு ஹைபர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணைகளின்மூலம் தாக்குதல் நடத்தியதாக, யேமனின் ஹவுதி கிளர்ச்சிப்படை கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இஸ்ரேலின் தாக்குதல்

இதுகுறித்து, ஹவுதிகளின் செய்தித் தொடர்பாளர், யஹ்யா சரீயா கூறுகையில்,

இஸ்ரேல் தலைநகரில் ஏவுகணைத் தாக்குதல் - ஹவுதிகள் பொறுப்பேற்பு | Rocket Attack On Israeli Capital

பலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலின் வன்முறையை எதிர்த்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டு, முடக்கங்கள் விலக்கப்படும் வரையில், தங்களது ஏவுகணைத் தாக்குதல்கள் தொடரும் எனவும் அவர் எச்சரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.