போதைப்பொருள் தடுப்பு தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் பலர் கைது

Sri Lanka Police Drugs NPP Government
By Faarika Faizal Nov 06, 2025 07:09 AM GMT
Faarika Faizal

Faarika Faizal

நாடு முழுவதும் போதைப்பொருளை தடுக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, இலங்கை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வரும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் போது பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

அதன்படி, நேற்று(05.11.2025) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளுக்கமைய, 3 கிலோகிராம் 321 கிராம் ஹெரோயின், 1 கிலோகிராம் 107 கிராம் ஐஸ், 48 கிராம் கொக்கெய்ன், 54 கிலோகிராம் 434 கிராம் கஞ்சா, 204, 548 கஞ்சா செடிகள், 11 கிலோகிராம் 325 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 6,674 போதை மாத்திரைகள் மற்றும் 27 கிராம் மாவா போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

நாட்டை காக்க ஜனாதிபதியுடன் கைகோர்ப்போம் : அழைப்பு விடுத்துள்ள வைத்தியர்

நாட்டை காக்க ஜனாதிபதியுடன் கைகோர்ப்போம் : அழைப்பு விடுத்துள்ள வைத்தியர்

கைது நடவடிக்கை 

அத்துடன், குறித்த போதைப்பொருட்களுடன் தொடர்புடைய, 980 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் தடுப்பு தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் பலர் கைது | Drugs In Sri Lanka

மேலும் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பில் 9 பேரும், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 19 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்நிலையில், 1053 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், மறுவாழ்வு நிலையங்களுக்கு 4 பேர் அனுப்பி வைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

165 ஆண்டுகளில் முதல் முறையாக பெண்களுக்கு கதவுகளைத் திறக்கிறது இலங்கை தொடருந்து திணைக்களம்

165 ஆண்டுகளில் முதல் முறையாக பெண்களுக்கு கதவுகளைத் திறக்கிறது இலங்கை தொடருந்து திணைக்களம்

தேர்தல் கால வாக்குறுதியை மீறும் அநுர : நியாயம் கேட்கும் முஜிபுர் ரஹ்மான்

தேர்தல் கால வாக்குறுதியை மீறும் அநுர : நியாயம் கேட்கும் முஜிபுர் ரஹ்மான்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW