தேர்தல் கால வாக்குறுதியை மீறும் அநுர : நியாயம் கேட்கும் முஜிபுர் ரஹ்மான்
அரச ஊழியர்கள் தொடர்பில் அரசாங்கத்தின் தேர்தல் கால வாக்குறுதிக்கு முரணாக அரசாங்கம் செயற்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
சுங்கத்தில் இருந்து எந்தவித பரிசோதனையும் இல்லாமல் 309 கொல்கலன்களை வெளியேற்றியதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்படும் அதிகாரியை ஜனாதிபதி சுங்கத்தின் பணிப்பாளராக நியமித்துள்ளதுடன், தற்போது அவரது சேவை காலத்தை நீடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது அரச ஊழியர்கள் தொடர்பில் அரசாங்கத்தின் தேர்தல் வாக்குறுதிக்கு முரணாகும் என முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
விசாரணைகளை தாமதிக்கும் அரசாங்கம்
இவ்வாறு சுங்கத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட 309 கொள்கலன்கள் தொடர்பான விசாரணைை நடவடிக்கையை அரசாங்கம் தாமதித்து வருவது தொடர்பில் குறிப்பிடுகையிலேயே அவர் தெரிவித்தாா்.

சுங்கத்தில் இருந்து பரிசேதனை எதுவும் இல்லாமல் 309 கொல்கலன்கள் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி விசாரணை குழுவொன்றை நியமித்து, விசாரணை அறிக்கையும் கையளிக்கப்பட்டு நான்கு மாதமாகின்ற போதும் இதுவரை அந்த அறிக்கையை அரசாங்கம் வெளியிடவில்லை.
அதனால் குறித்த விசாரணை அறிக்கையை நாங்கள் நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்தோம். நாங்கள் நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பித்த அறிக்கையை அரசாங்கம் நிராகரிக்கவில்லை.
பணிப்பாளருக்கு எதிரான குற்றச்சாட்டு
அத்துடன், ஜனாதிபதி அமைத்த விசாரணை குழுவின் அறிக்கையில் சுங்க திணைக்களத்தின் அதிகாரிகள் பலருக்கு எதிராக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதில் தற்போதைய பணிப்பாளருக்கு எதிராகவே பாரிய குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.
அந்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை மேற்கொள்ளாமல் ஜனாதிபதி இவருக்கு சுங்கத்தின் பணிப்பாளர் பதவி வழங்கி இருக்கிறார். ஜனாதிபதி நியமித்த குழுவினாலே குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டிருக்கும் ஒருவரை எப்படி பணிப்பாளராக நியமிக்க முடியும்? அது நியாயமா என கேட்கிறோம் என அவர் அரசாங்கத்தை விமர்சித்திருந்தார்.
You May Like This Video...
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |