வெலிகம பிரதேச சபை தலைவரின் கொலை : அரசாங்கத்தை கடுமையாக விமர்சிக்கும் ஹக்கீம்

Srilanka Muslim Congress Rauf Hakeem NPP Government
By Faarika Faizal Oct 23, 2025 06:36 AM GMT
Faarika Faizal

Faarika Faizal

வெலிகம பிரதேச சபைத்தவிசாளரின் கொலைக்குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் நாடாளுமன்றத்தில் நேற்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 

வெலிகமவில் இடம்பெற்ற பிரதேச சபைத் தவிசாளருடைய கொலைச் சம்பவம் எல்லோரையும் மிக மோசமாகப் பாதித்துள்ளது. 

இந்த கொலை சம்பந்தமாக உரிய விசாரணை மேற்கொள்ளப்படுவதுடன் சட்ட, ஒழுங்குக்குப் பொறுப்பான அமைச்சர் இது சம்பந்தமான விளக்கத்தை நாடாளுமன்றத்தில் விடுக்க வேண்டும்.

துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கான பிரதேச சபை தலைவருக்கு பாதாள உலகுடன் தொடர்பு

துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கான பிரதேச சபை தலைவருக்கு பாதாள உலகுடன் தொடர்பு

நாட்டு மக்களின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது

அத்துடன், இன்று அரசியல்வாதிகளுடைய பாதுகாப்பு மாத்திரமல்ல, பொதுமக்களுடைய பாதுகாப்பும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கின்றது. திட்டமிட்டு பட்டப்பகலில் ஒரு காரியாலயத்திற்குள் புகுந்து ஒரு உள்ளூராட்சி சபைத் தவிசாளரைக் கொலை செய்வது சாதாரணமான விடயமல்ல.

வெலிகம பிரதேச சபை தலைவரின் கொலை : அரசாங்கத்தை கடுமையாக விமர்சிக்கும் ஹக்கீம் | Rauff Hakeem

இந்த உள்ளூராட்சி சபைத்  தவிசாளரை நியமிக்கின்ற தினத்தில் அவருக்குச் சார்பாக வாக்களிக்க இருந்தவர்களை கடத்திச் சென்று தடுத்து வைத்திருந்த சம்பவம் அரசாங்கத்தின் மேல் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த பின்னணியில் இவ்வாறான கொலை நடைபெற்றிருப்பது என்பது அரசியல் ரீதியாக இதற்கு சம்பந்தமிருக்கிறதா? ஏற்கனவே இதை வேறு பக்கங்களில் திசைதிருப்புவதற்காக கொலையுண்டவரை அவமானப்படுத்தும் அடிப்படையில் சில காரணங்களைச் சொல்ல சில ஊடகங்கள் முயற்சிக்கின்றன. அதற்குப் பின்னால் அரச தரப்பினரும் இருக்கிறார்களா? என்ற சந்தேகம் வலுவாக இருக்கிறது.

வெலிகம பிரதேச சபை தலைவரின் கொலை : அரசாங்கத்தை கடுமையாக விமர்சிக்கும் ஹக்கீம் | Rauff Hakeem

இந்த சூழ்நிலையில் இது சம்பந்தமாக அவசரமாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அத்துடன், நீதிமன்றத்திற்குள்ளே கொலைச் சம்பவத்தை திட்டமிட்டார் என்ற அடிப்படையில் நாட்டிற்கு வெளியில் சென்று பெண்ணொருவரைக் கைது செய்ய முடியுமாயின், இன்று நாட்டுக்குள்ளே கொலையை நடத்திய கொலைதாரிகளை மிக அவசரமாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டுமென மிக அழுத்தம் திருத்தமாக வேண்டிக்கொள்கின்றோம் எனத் குறிப்பிட்டுள்ளார். 


You May Like This Video...

அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் சங்கங்களின் பேரவைக்கு பிரதமர் பாராட்டு

அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் சங்கங்களின் பேரவைக்கு பிரதமர் பாராட்டு

நூற்றுக்கு மேற்பட்ட குற்றவாளிகளை தப்பிக்கச் செய்த ஜே.கே பாய்

நூற்றுக்கு மேற்பட்ட குற்றவாளிகளை தப்பிக்கச் செய்த ஜே.கே பாய்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW