நூற்றுக்கு மேற்பட்ட குற்றவாளிகளை தப்பிக்கச் செய்த ஜே.கே பாய்

Crime Ishara sewwandi Ganemulle sanjeewa
By Faarika Faizal Oct 21, 2025 03:01 PM GMT
Faarika Faizal

Faarika Faizal

கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடையதாக இஷாரா செவ்வந்தியுடன் கைது செய்யப்பட்ட ஜே.கே பாய் என்பவர் இதுவரையில் நூற்றுக்கு மேற்பட்ட குற்றவாளிகளை நாட்டிலிருந்து தப்பிக்கச் செய்துள்ளதாக விசாரணைகளில் வெளிவந்துள்ளது.

அதன்படி, ஜே.கே பாய் என்பவர் பல ஆண்டுகளாகவே இவ்வாறான குற்றத் தொழில்களில் ஈடுபட்டு வந்துள்ளதுடன் தற்போது சர்வதேச மனித கடத்தல்காரராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஐரோப்பிய நாடொன்றுக்கு செல்வதே இஷாராவின் ஒரே கனவு: விசாரணைகளில் வெளியான உண்மைகள்

ஐரோப்பிய நாடொன்றுக்கு செல்வதே இஷாராவின் ஒரே கனவு: விசாரணைகளில் வெளியான உண்மைகள்

மனித கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகள்

தெற்காசியாவில் உள்ள மனித கடத்தல்காரர்களுக்கும் இவருக்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் உள்ளமையும் விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

நூற்றுக்கு மேற்பட்ட குற்றவாளிகளை தப்பிக்கச் செய்த ஜே.கே பாய் | Ishara Sewwandi

இதேவேளை, பாதாள உலகக் குழுக்களை சேர்ந்தவர்களை இந்தியாவில் தங்கவைத்து துபாய்க்கு தப்பிச் செல்லவும் இவர் உடந்தையாக இருந்துள்ளமை தெரியவந்துள்ளது.

அத்துடன், இஷாரா செவ்வந்தி கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு இன்னும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

ஊடகங்களுக்கு முன் மட்டுமே வீர சாகசங்கள்: இஷாரா கைது தொடர்பாக பிரதி பொலிஸ்மா அதிபரின் கருத்து

ஊடகங்களுக்கு முன் மட்டுமே வீர சாகசங்கள்: இஷாரா கைது தொடர்பாக பிரதி பொலிஸ்மா அதிபரின் கருத்து

இஷாரா செவ்வந்திக்கு பிரதி அமைச்சர் பாராட்டு

இஷாரா செவ்வந்திக்கு பிரதி அமைச்சர் பாராட்டு

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW