ஆலையடிவேம்பில் விசேட தேவையுடைய மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கற்றல் உபகரணங்கள்

Ampara Sri Lanka Sri Lankan Peoples Eastern Province
By Rakshana MA Dec 15, 2024 04:40 AM GMT
Rakshana MA

Rakshana MA

ஆலையடிவேம்பிலுள்ள விசேட தேவையுடையவர்களுக்கு நலன்புரி சங்கத்தின் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வு அண்மையில்  இடம்பெற்றுள்ளது.

இது  கோளாவில் சிவ கலை மண்டபத்தில் விசேட தேவையுடையோர் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் திருநாவுக்கரசு விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்றுள்ளது.

ஊத்துச்சேனைக் கொலையில் ஈடுபட்டவர்கள் கைது

ஊத்துச்சேனைக் கொலையில் ஈடுபட்டவர்கள் கைது

சிறப்பு தேவையுடைய மாணவர்கள்...

இந்த நிகழ்வில் விசேட தேவையுடைய 100 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

ஆலையடிவேம்பில் விசேட தேவையுடைய மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கற்றல் உபகரணங்கள் | Donated A Special Need Students In Alayadivembu

மேலும், பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.ஜெயராஜன் கலந்து கொண்டதுடன்,  விசேட அதிதிகளாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ், தனியார் நிறுவனமொன்றின்  பணிப்பாளர் க.ரகுபதி, மட்டக்களப்பு சமாதான நீதவான்கள் சம்மேளனத்தின் செயலாளர் ரீ.லட்சுமிகாந்தன் உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்தனர்.

காத்தான்குடி முன்பள்ளியின் விளையாட்டு நிகழ்வு

காத்தான்குடி முன்பள்ளியின் விளையாட்டு நிகழ்வு

மூதூரில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கை தீவிரம்

மூதூரில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கை தீவிரம்

      நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW