ஊத்துச்சேனைக் கொலையில் ஈடுபட்டவர்கள் கைது

Batticaloa Sri Lanka Sri Lankan Peoples Sri Lanka Police Investigation Crime
By Rakshana MA Dec 14, 2024 06:08 AM GMT
Rakshana MA

Rakshana MA

மட்டக்களப்பு எல்லைக்கிராமமான வடமுனை ஊத்துச்சேனையில் இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் இரண்டு பேர் நேற்று(13) வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டவரின் மனைவியின் சகோதரன் மற்றும் சகோதரி என தெரியவந்துள்ளது.

நாட்டின் பல பகுதியில் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

நாட்டின் பல பகுதியில் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

விசாரணை

வடமுனை ஊத்துச்சேனை பிரதேசத்தில் நேற்று முன்தினம்(12) வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் சம்பவத்தில் உயிரிழந்தவர் வடமுனை- ஊத்துச்சேனையைச் சேர்ந்த 48 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையான வேலு சிவசுப்பிரமணியம் என்பவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊத்துச்சேனைக் கொலையில் ஈடுபட்டவர்கள் கைது | Valaichenai Man Killed By Sharp Weapon

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், உயிரிழந்த நபர் நேற்றையதினம் தனது மனைவியின் சகோதரருடன் மது அருந்தி விட்டு வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்தநிலையில்,சகோதரியின் கணவர் மீது கோடாரி மற்றும் கூரிய ஆயுதத்தால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதையடுத்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தடவியல் பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் தீவிரமடையும் எலிக்காய்ச்சல் : இதுவரை 7 உயிரிழப்புக்கள்

யாழில் தீவிரமடையும் எலிக்காய்ச்சல் : இதுவரை 7 உயிரிழப்புக்கள்

மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்: அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கை

மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்: அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கை

     நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW