மூதூரில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கை தீவிரம்

Trincomalee Sri Lanka Dengue Prevalence in Sri Lanka Public Health Inspector
By Rakshana MA Dec 14, 2024 07:45 AM GMT
Rakshana MA

Rakshana MA

மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள அல்லைநகர் மேற்குப்பகுதியில் டெங்கு தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான புகை விசிறும் நடவடிக்கை இன்று(14) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தோப்பூர் – அல்லைநகர் மேற்குப் பகுதியில் அண்மைக்காலமாக டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் புகை விசிறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஊத்துச்சேனைக் கொலையில் ஈடுபட்டவர்கள் கைது

ஊத்துச்சேனைக் கொலையில் ஈடுபட்டவர்கள் கைது

அதிகரிக்கும் டெங்கு நோயாளர்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆர்.முரளீஸ்வரன் தெரிவித்திருந்தார்.

மூதூரில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கை தீவிரம் | Dengue Prevalence In Mutur 2024 

தொடர்ந்தும் தெரிவிக்கையில், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் டெங்கு நோய் கட்டுப்பாட்டு பரிசோதனைகள் மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம், அதிகளவு டெங்கு நோய் பரவக்கூடிய இடங்களாக வீடுகள், அரச மற்றும் அரச சாரா திணைக்களங்கள் என்பன அடையாளம் காணப்பட்டுள்ளன.

எனவே இந்த அபாயகரமான சூழ்நிலையில் பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். அத்துடன் டெங்கு நுளம்புகள் பரவக்கூடிய இடங்களை போதிய கவனத்தை செலுத்தி, டெங்கு நுளம்புகள் பரவக்கூடிய சூழல் அற்ற இடமாக வைத்திருங்கள்.

சுற்றுலாத்துறையில் ஏற்படப்போகும் பாரிய மாற்றம்

சுற்றுலாத்துறையில் ஏற்படப்போகும் பாரிய மாற்றம்

நோய் பரவும் அபாயம்

இதற்கிடையில், எலி காய்ச்சல் அபாயம் இருப்பதனால் விவசாயிகளும் வயல் நிலங்களை அண்டி வசிப்பவர்களும் மிகுந்த அவதானத்துடன் இருப்பதுடன், காய்ச்சல் ஏற்படுமிடத்து அருகிலுள்ள வைத்தியசாலைகளுக்கு சென்று உரிய பரிசோதனைகளை மேற்கொள்ளுங்கள்.

மூதூரில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கை தீவிரம் | Dengue Prevalence In Mutur 2024

அது மட்டுமல்லாது, இது பண்டிகை காலம் என்பதனால் பொது போக்குவரத்தில், பிரயாணத்தில் ஈடுபடும் பயணிகள் உணவு உண்பதற்காக நிறுத்தப்படும் உணவு சாலைகளில் தமக்கு தரமான உணவு விநியோகிக்கப்படுகின்றதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதுடன், ஏதேனும் முறைப்பாடுகள் இருப்பின் எமக்கு அறிவிக்குமிடத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனை தொடர்ந்து மூதூரில் டெங்கு பரவும் அபாயமுள்ள வீடுகள், பொது இடங்கள் இனம் காணப்பட்டு புகை விசிறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் திகதி தொடர்பில் வெளியான தகவல்

அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் திகதி தொடர்பில் வெளியான தகவல்

மட்டக்களப்பில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை..!

மட்டக்களப்பில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை..!

     நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW