அதிகரிக்கும் தேர்தல் முறைப்பாடுகள் குறித்து அதிருப்தியில் தேர்தல் அமைப்புக்கள்
தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் தற்போது 700ஐ தாண்டியுள்ளதாக தேர்தல் ஆணையம் மற்றும் தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, தேர்தல வன்முறையைத் தவிர்க்க சம்பந்தப்பட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து ஆணைக்குழு ஆலோசித்து வருவதாக தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழு
தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூற்றுப்படி, திங்கட்கிழமை மாலை வரை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான 771 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 20 வரையிலான காலப்பகுதியில் இந்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதில் ஒரு வன்முறை சம்பவ முறைப்பாடும் உள்ளடங்கியுள்ளது இதற்கிடையில், தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக மொத்தம் 145 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கை என்ற பெப்ரல் அறிவித்துள்ளது.
பெப்ரலின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சியின் தகவல்படி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு சம்பவத்துடன் ஏழு வன்முறைச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |