தேர்தல் காலத்தில் மக்களுக்கு மானியங்கள் வழங்கும் அரசாங்கம்! ஏற்க முடியாது என்கிறது பெப்ரல்

Government Of Sri Lanka Election
By Mayuri Aug 23, 2024 05:11 AM GMT

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசாங்கம் மக்களுக்கு மானியங்கள் வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரான ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த விடயம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கான சலுகைகள்

எனினும் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இவ்வாறான சலுகைகள் மக்களுக்கு வழங்கப்படவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.  

தேர்தல் காலத்தில் மக்களுக்கு மானியங்கள் வழங்கும் அரசாங்கம்! ஏற்க முடியாது என்கிறது பெப்ரல் | Government Giving Subsidies To People

இவ்வாறு, மக்களின் பொருளாதார பிரச்சினைகளை தீர்க்க மானியங்கள் வழங்குவது அவசியமானால் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் அவற்றை வழங்க முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW