தம்மிக்க பெரேராவை தேர்தலில் களமிறக்க பசில் வகுத்த திட்டம்!
தொழிலதிபர் தம்மிக்க பெரேராவை பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க முன்மொழியப்பட்டமையானது, பசில் ராஜபக்ச பணம் மீது கொண்ட பேராசையின் விளைவே காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க கடுமையாக விமர்சித்துள்ளார்.
மஸ்கெலியா தொகுதியில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
ஜனாதிபதித் தேர்தல்
இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பூரண ஆதரவை வழங்கவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்திருந்தேன்.
மொட்டு கட்சியை சேர்ந்த பெரும்பாலான உறுப்பினர்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க இணங்கியுள்ளனர்.
தம்மிக்க பெரேரா தேர்தலில் தோல்வியடைவதற்காகத் தேர்தலில் போட்டியிட போவதில்லை என என கூறி விலகிக் கொண்டனர்.
எவ்வாறாயினும், இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கியுள்ள நாமல் ராஜபக்ச படுதோல்வியை சந்திப்பார்.
அவர் இந்தத் தேர்தலுக்கு இன்னும் முழுமையடையவில்லை. பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக வர்த்தகர் தம்மிக்க பெரேரா அதிக பணத்துடன் தேர்தலுக்கு தயாராகினார்." என்றார்.