நீர்க் கட்டணத்தைக் குறைத்து வர்த்தமானி அறிவித்தல்
Sri Lanka
Water
By Mayuri
நீர்க் கட்டணத்தைக் குறைத்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 21ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நீர்க்கட்டணத்தை குறைத்து குறித்த வர்த்தமானி வெளியானது.
குறைக்கப்படும் சதவீதம்
இதன்படி, வீட்டு உபயோகத்திற்கான நீர்க் கட்டணம் 7 சதவீதமும், அரச வைத்தியசாலைகளுக்கான நீர்க் கட்டணம் 4.5 சதவீதமும் குறைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், பாடசாலைகள் மற்றும் மதஸ்தலங்களுக்கான நீர்க் கட்டணம் 4.5 சதவீதத்தாலும் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.