அலி சாஹிர் மௌலானாவுக்கு ஒருவார கால அவகாசம்: ரவூப் ஹக்கீம் அறிவிப்பு

Colombo Srilanka Muslim Congress Sri Lanka Presidential Election 2024
By Laksi Aug 23, 2024 07:33 AM GMT
Laksi

Laksi

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா கட்சியின் தீர்மானத்துக்கு, எதிராக செயற்பட்டமை தொடர்பில்  ஒருவார காலத்துக்குள் அவர் பதிலளிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, அவர் வழங்கும் பதிலை அடிப்படையாகக் கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அதிகரிக்கும் தேர்தல் முறைப்பாடுகள் குறித்து அதிருப்தியில் தேர்தல் அமைப்புக்கள்

அதிகரிக்கும் தேர்தல் முறைப்பாடுகள் குறித்து அதிருப்தியில் தேர்தல் அமைப்புக்கள்

பிரச்சாரம்

அவர் மேலும் தெரிவித்ததாவது, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம். ஹரிஸை கட்சியின் பிரதித் தலைவர் பதவியில் இருந்து இடைநிறுத்தியதன் பின்னர் என்னை சந்திப்பதற்கு அவர் அனுமதி கோரியிருந்தார்.நான் அதற்கு அனுமதியளிக்கவில்லை.

அலி சாஹிர் மௌலானாவுக்கு ஒருவார கால அவகாசம்: ரவூப் ஹக்கீம் அறிவிப்பு | Disciplinary Action Against Ali Sahir Maulana

தேர்தல் மேடைகளில் ஏறி பிரசாரம் செய்ய வேண்டும், பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக மக்களுக்கு பகிரங்கமாக தெளிவுப்படுத்த வேண்டும் என்பதை கட்சி அறிவுறுத்தியிருந்தது.அவரது குறைப்பாட்டை அவர் பகிரங்கமாக ஏற்றுக்கொண்டு சத்தியக்கடதாசி ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.

தம்மிக்க பெரேராவை தேர்தலில் களமிறக்க பசில் வகுத்த திட்டம்!

தம்மிக்க பெரேராவை தேர்தலில் களமிறக்க பசில் வகுத்த திட்டம்!

காலவகாசம்

கட்சியின் உச்ச பீடத்துக்கு சத்திய கடதாசியை சமர்ப்பித்து அவரது நியாய காரணிகளும் கேட்கப்படும்.கட்சியின் உச்ச பீடமே தீர்மானத்தை எடுக்கும். கட்சியின் தீர்மானத்துக்கு அமைய செயற்படுவதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

அலி சாஹிர் மௌலானாவுக்கு ஒருவார கால அவகாசம்: ரவூப் ஹக்கீம் அறிவிப்பு | Disciplinary Action Against Ali Sahir Maulana

ஆகவே அவருக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவதா இல்லையா என்பதை கட்சியின் உச்ச பீடம் தீர்மானிக்கும்.

அலி சாஹிர் மௌலானாவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். பதிலளிப்பதற்கு ஒருவார காலவகாசம் வழங்கியுள்ளோம். அவர் வழங்கும் பதிலை அடிப்படையாகக் கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என  ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

தேர்தல் காலத்தில் மக்களுக்கு மானியங்கள் வழங்கும் அரசாங்கம்! ஏற்க முடியாது என்கிறது பெப்ரல்

தேர்தல் காலத்தில் மக்களுக்கு மானியங்கள் வழங்கும் அரசாங்கம்! ஏற்க முடியாது என்கிறது பெப்ரல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW