நிந்தவூர் பிரதேச அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

Sri Lanka Climate Change Eastern Province Floods In Sri Lanka Nintavur
By Rakshana MA Nov 30, 2024 06:56 AM GMT
Rakshana MA

Rakshana MA

நாட்டில் தற்போது  நிலவி வரும் சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட திடீர் அனர்த்த நிலமைகள் குறித்து ஆராய்வதற்காக நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எல்.அப்துல் லத்தீபின் தலைமையில் பிரதேச அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினர்களான அஷ்ரப் தாஹிர், ஏ.ஆதம்பாவா, எம்.எஸ். உதுமா லெவ்வை மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதி பணிப்பாளர் எம்.எஸ்.எம்.றியாஸ், நிந்தவூர் பிரதேச சபை செயலாளர், நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி, நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கிராம சேவை உத்தியோகத்தர்கள், அபவிருத்தி உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

தங்க விலையில் திடீர் மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு வெளியான தகவல்

தங்க விலையில் திடீர் மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு வெளியான தகவல்

கண்டறியப்பட்ட காரணங்கள்....

இதன் போது நிந்தவூர் பிரதேசத்தில் ஏற்பட்ட அனர்த்தங்கள் குறித்து கிராம சேவையாளர்களிடம் கலந்துரையாடப்பட்டது.

மேலும் வெள்ள நீர் வழிந்தோடாமைக்கான காரணமாக, குடியிருப்பு காணிகளை விடவும் வீதிகள் உயரமாக அமைக்கப்பட்டிருப்பது என அடையாளப்படுத்தப்பட்டது.

நிந்தவூர் பிரதேச அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு குழு கூட்டம் | Disaster Management Meeting In Nintavur

அதே போல வடிகான் துப்பரவு பணிகள் முழுமையடையாமையும் நீர் வழிந்தோடாமைக்கான காரணங்களுள் ஒன்றாக கண்டறியப்பட்டுள்ளது.

எனினும் இனிவரும் காலங்களில் அனர்த்தத்தின் போதான முன்னாயத்த திட்டங்கள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டிருந்ததுடன் விவசாயிகளின் வயல்கானி அழிவுகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதார பாதிப்புக்கள் குறித்தும் அவற்றுக்கான நஷ்ட ஈடுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டிருந்தன.

காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

மாற்றத்திற்கான அரசாங்கம்

மேலும் இதன் போது உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர், நாட்டின் பொருளாதார மேம்பாடுகளை பொறுத்தே இவ் அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்கள் அமையும் என சுட்டிக்காட்டினார்.

அத்துடன் கடந்த கால ஆட்சியாளர்கள் மீது மக்கள் கொண்ட வெறுப்பின் காரணமாக மாற்றம் வேண்டியே இவ் அரசாங்கத்திற்கு அதிகமான வாக்குகளை மக்கள் வழங்கியிருக்கின்றார்கள்.

நிந்தவூர் பிரதேச அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு குழு கூட்டம் | Disaster Management Meeting In Nintavur

மேலும் இந்த ஆட்சியில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒற்றுமையுடன் செயற்படுவதை அறிய முடிகின்றது. அதே போல அரச அதிகாரிகளும் அரசாங்கத்திற்கு சிக்கனமான முறையில் செயற்திட்டங்களை முன்னெடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கினாலே ஊழலற்ற ஆட்சியினை முன்னெடுக்க முடியுமெனக் கூறியிருந்தார்.

இதன்போது தனது வேண்டுகோளையேற்று, நிந்தவூர் பிரதான வீதி ஆலிம் விழுந்த பாலம் வெள்ள நீரினால் பாதிப்புக்குள்ளாகி முற்றாக சேதமடைந்து போக்குவரத்து தடைப்பட்டிருந்ததையடுத்து விரைவாக செயற்பட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைமை பொறியியலாளர் ஏ.எல்.அலியாருக்கும் தடைப்பட்டிருந்த நிந்தவூர் பிரதேசத்திற்கான குடிநீர் விநியோகம் தற்காலிகமாக ஒலுவில் பிரதேச இணைப்பிலிருந்து விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட அக்கறைப்பற்று பிராந்திய நீர்வழங்கள் அதிகார சபையின் பிராந்திய பொறியியலாளர் எம்.ஹைதர் அலிக்கும் விரைவாக செயற்பட்ட ஊழியர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் சபை முன்னிலையில் நன்றிகளை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை-இந்திய உறவு: ரணில் விடுத்துள்ள கோரிக்கை

இலங்கை-இந்திய உறவு: ரணில் விடுத்துள்ள கோரிக்கை

அம்பாறையில் வெள்ளத்தில் சிக்கிய நபரின் சடலம் 4 நாட்களின் பின் மீட்பு

அம்பாறையில் வெள்ளத்தில் சிக்கிய நபரின் சடலம் 4 நாட்களின் பின் மீட்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW