நாமல் - ஷிரந்திக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
Namal Rajapaksa
Shiranthi Rajapaksa
Crime Branch Criminal Investigation Department
By Fathima
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவுக்கு இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நிதி மோசடி
பாதாள உலகக் கும்பல் தலைவர் கெஹெல்பத்தர பத்மேவுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக வாக்குமூலம் பெற்றுக்கொள்ளும் நோக்கில் நாமல் அழைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, அவரது தாயார், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச நாளை பொலிஸ் நிதிக் குற்றப்பிரிவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளார்.
சிரிலிய கணக்கு தொடர்பான நிதி மோசடி தொடர்பாக அவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.