அம்பாறையில் வெள்ளத்தில் சிக்கிய நபரின் சடலம் 4 நாட்களின் பின் மீட்பு

Ampara Climate Change Eastern Province
By Laksi Nov 29, 2024 12:38 PM GMT
Laksi

Laksi

அம்பாறையில், ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நபர் ஒருவரின் சடலம் 4 நாட்களின் பின்னர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சடலமானது  இன்று (29.11.2024) திரவந்திய மேடு பகுதியில் கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

கல்முனை பாண்டிருப்பு பகுதியை சேர்ந்த நாகலிங்கம் சுரேஸ் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இலங்கை-இந்திய உறவு: ரணில் விடுத்துள்ள கோரிக்கை

இலங்கை-இந்திய உறவு: ரணில் விடுத்துள்ள கோரிக்கை

மேலதிக நடவடிக்கை

கடந்த (26.11.2024) அன்று கிட்டங்கி ஆற்றுக்கு குறுக்காக பயணம் செய்த 48 வயது மதிக்கத்தக்க கூலி தொழிலாளியான குறித்த நபர் வெள்ள நீரினால் அடித்து செல்லப்பட்ட நிலையில் காணாமல் போயிருந்தார்.

அம்பாறையில் வெள்ளத்தில் சிக்கிய நபரின் சடலம் 4 நாட்களின் பின் மீட்பு | Ampara In Flood Recovery Of The Victim S Body

இந்நிலையில் 4 நாட்களாக தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த இலங்கை கடற்படையினர் இன்று திரவந்திய மேடு பகுதியில் கரையொதுங்கிய நிலையில் குறித்த நபரின் சடலத்தை மீட்டுள்ளனர்.

இதன் பின்னர் சடலமானது கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

குறித்த சடலம் தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

அம்பாறையில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து துக்க தினம் அனுஷ்டிப்பு

அம்பாறையில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து துக்க தினம் அனுஷ்டிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW