அம்பாறையில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து துக்க தினம் அனுஷ்டிப்பு

Ampara Climate Change Eastern Province Weather
By Laksi Nov 29, 2024 06:40 AM GMT
Laksi

Laksi

அம்பாறையில் (Ampara) வெள்ள நீரில் அகப்பட்டு மரணமடைந்த மாணவர்கள் உட்பட ஏனையோரது மறுவாழ்விற்காக வெள்ளைக் கொடிகள் கட்டப்பட்டு துக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

குறித்த நிகழ்வானது நிந்தவூர்- மாவடிப்பள்ளி சம்மாந்துறை பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மேலும் நிந்தவூர் காஷிபுல் உலூம் அறபுக் கல்லூரி மத்ரசாவில் கல்வி கற்று மரணமடைந்த மாணவர்களின் மறுவாழ்விற்காக துக்கம் அனுஷ்டிக்கப்பட்டு வெள்ளைக் கொடிகள் பறக்கவிடப்பட்டது.

வடக்கு- கிழக்கில் வைத்தியசாலை பணிப்பாளர்கள் சிலருக்கு இடமாற்றம்

வடக்கு- கிழக்கில் வைத்தியசாலை பணிப்பாளர்கள் சிலருக்கு இடமாற்றம்

துக்க தினம்

அம்பாறை(Ampara) - காரைத்தீவில், பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அதில் பயணித்த 13 பேரில் 5 மாணவர்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் இன்னும் மீட்கப்படவில்லை. இந்த சம்பவமானது முழு நாட்டையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அம்பாறையில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து துக்க தினம் அனுஷ்டிப்பு | Mourning Day Observed In Ampara

மேலும் இம்மாணவர்களின் தவிர்க்க முடியாத பிரிவின் காரணமாக துக்கத்தினை வெளிப்படுத்தும் நோக்குடன் சமூக நலன் விரும்பிகளால் வெள்ளைக் கொடி கட்டி பறக்கவிடப்பட்டுள்ளது.

விஷேட துஆ பிரார்த்தனை

அதே போன்று இன்றைய தினம்(29) வெள்ளிக் கிழமை நிந்தவூர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் கீழ் இயங்கக் கூடிய அனைத்து ஜும்ஆ பள்ளிவாசல்களிலும் இடம் பெறக் கூடிய குத்பாக்களிலும் ஷஹீதுகளுடைய அந்தஸ்து தொடர்பாக குத்பா உரை நிகழ்த்தப்பட உள்ளது.

அம்பாறையில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து துக்க தினம் அனுஷ்டிப்பு | Mourning Day Observed In Ampara

மேலும், ஜும்ஆ தொழுகையினைத் தொடர்ந்து மரணமடைந்த மாணவர்களுக்காக ஜனாஸா தொழுகை நடாத்த ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதோடு அதனைத் தொடர்ந்து விஷேட துஆ பிரார்த்தனையும் இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW