வடக்கு- கிழக்கில் வைத்தியசாலை பணிப்பாளர்கள் சிலருக்கு இடமாற்றம்

Batticaloa Mannar Eastern Province Northern Province of Sri Lanka
By Laksi Nov 29, 2024 05:32 AM GMT
Laksi

Laksi

வடக்கு- கிழக்கில் பணியாற்றிய சுகாதார சேவைகள் திணைக்கள பிரதி பணிப்பாளர் மற்றும் வைத்தியசாலை பணிப்பாளர்கள் சிலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வைத்தியர் ஆர்.முரளிஸ்வரன் மட்டக்களப்பு (Batticaloa) பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வைத்தியர் ஜி.சுகுணன் மட்டக்களப்பு கல்முனை (Kalmunai) வடக்கு வைத்தியசாலையின் பணிப்பாளராகவும், வைத்தியர் டி.வினோதன் மன்னார் (Mannar) பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளராக நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

இடமாற்றம்

அத்தோடு, வைத்தியர் கே.ஜி.சீ.வை.எஸ்.வீ.வீரக்கோன் ஊவா மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளராகவும், பி.எஸ்.என்.விமலரட்ண கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளராகவும், என்.சீ.டி.ஆரியரட்ண வவுனியா பொது வைத்தியசாலை பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு- கிழக்கில் வைத்தியசாலை பணிப்பாளர்கள் சிலருக்கு இடமாற்றம் | Transfer Of Hospital Officers In North East

டபிள்யூ.ஏ.நி. நிச்சங்க அம்பாறை மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளராகவும், எம்.எச்.எம்.அசாத் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளராகவும், டபிள்யூ.கே.சீ.பீ.வீரவத்த கிளிநொச்சி (Kilinochchi) பொது வைத்தியசாலை பணிப்பாளராகவும், டி.எம.ஏ.கே.திசாநாயக்க கிளிநொச்சி மாவட்ட பிரந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளராகவும், எஸ்.என்.வீ.பிரேமதாச முல்லைத்தீவு (Mullaitivu) பொது வைத்தியசாலை பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், எதிர்வரும் 02 ஆம் திகதிக்கு பின் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெள்ளவாய்க்கால்களை ஆக்கிரமித்துள்ள கட்டடங்கள்: ஆளுநர் விடுத்துள்ள பணிப்புரை

வெள்ளவாய்க்கால்களை ஆக்கிரமித்துள்ள கட்டடங்கள்: ஆளுநர் விடுத்துள்ள பணிப்புரை

அரச வீடுகளுக்காக வரிசையில் நிற்கும் எம்.பிக்கள்..!

அரச வீடுகளுக்காக வரிசையில் நிற்கும் எம்.பிக்கள்..!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW