இலங்கை-இந்திய உறவு: ரணில் விடுத்துள்ள கோரிக்கை
இலங்கையின் புதிய அரசாங்கம் இந்தியாவுடனான உறவை வலுப்படுத்த வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremsinghe) தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மத்திய பிரதேசத்தின் இந்தோரில் சத்திய சாய் வித்தியா விஹார் உயர் கல்வி நிறுவனத்தின் நிகழ்வு ஒன்றில் பங்குபற்றுவதற்காக ரணில் அங்கு சென்றிருந்தார்.
இந்த நிலையில், இந்திய ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரச மாளிகைகளுக்கு விஜயம்
இதேவேளை, இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர் நகருக்கு சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அந்நகரில் அமைந்துள்ள பழைய கோட்டை உட்பட பல அரச மாளிகைகளுக்கு விஜயம் செய்துள்ளார்.
இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 30ஆம் திகதி நாடு திரும்புவார் என தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |