மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள தீவிர நிலை! திடீரென இடைநிறுத்தப்பட்ட விமான சேவைகள்
மத்திய கிழக்கில் உள்ள நகரங்களுக்கு செல்லும் விமான சேவைகளை குறைந்தது இரண்டு ஐரோப்பிய விமான நிறுவனங்கள் இடைநிறுத்தியுள்ளன.
“புவியியல் அரசியல் சூழ்நிலையை” தொடர்ந்து கண்காணித்து வருவதால் துபாய்க்கான சேவையை தற்காலிகமாக நிறுத்துவதாக ஏர் பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
விமான சேவைகள்
நெதர்லாந்து விமான நிறுவனம் KLM, இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவூதி அரேபியாவுக்கான விமான சேவைகளை அடுத்த அறிவிப்பு வரும் வரை நிறுத்தியுள்ளது.

அத்துடன், ஈராக் மற்றும் ஈரான் உட்பட அந்தப் பிராந்தியத்தின் பல நாடுகளின் வான்வெளியில் பறக்காது என்றும், நெதர்லாந்து அரசின் ஒளிபரப்பு நிறுவனம் NOS தெரிவித்துள்ளது.
பிரான்ஸின் தேசிய விமான நிறுவனம் ஏர் பிரான்ஸ் வெளியிட்ட அறிக்கையில்,துபாய்க்கான விமான சேவையை தற்காலிகமாக இடைநிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளதுடன் மத்திய கிழக்கில் உள்ள தற்போதைய சூழ்நிலையை காரணமாகக் கொண்டு இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளது.
நிலவரத்தை ஏர் பிரான்ஸ் நேரடியாக கண்காணித்து வருகிறது என்றும் விமான அட்டவணை தொடர்பான மேலதிக தகவல்கள் வழங்கப்படும் என்றும் அந்த நிறுவனம் கூறியது. இந்த விமான சேவை பாதிப்புகள், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வியாழக்கிழமை கூறிய அறிவிப்புக்கு பின்னணியாக நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.
ஈரானை கவனித்து வருகிறோம்
ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் மீதான சமீபத்திய அடக்குமுறையை தொடர்ந்து, இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளும் மிரட்டல்களில் இருந்து பின்வாங்கியதாக தோன்றிய சில நாட்களுக்குப் பிறகு, “பெரிய படையணி” என அவர் விவரித்த அமெரிக்க போர் கப்பல்கள் வளைகுடா பகுதியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன என்று அவர் கூறினார்.
சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற்ற உலக பொருளாதார மாநாட்டிலிருந்து ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் திரும்பிய போது செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “நாங்கள் ஈரானை கவனித்து வருகிறோம்.
தேவைப்பட்டால் பயன்படுத்துவதற்காக, அந்தத் திசையில் பல கப்பல்கள் செல்கின்றன. ஈரானை நோக்கி ஒரு பெரிய படை நகர்ந்து வருகிறது.” என்றும் அவர் தெரிவித்தார்.