எங்கள் பொறுமைக்கு எல்லை உண்டு! அமெரிக்காவிற்கு ஈரான் விடுத்த பகிரங்க எச்சரிக்கை

United States of America Iran
By Fathima Jan 24, 2026 08:04 AM GMT
Fathima

Fathima

எங்கள் பொறுமைக்கு எல்லை உண்டு, அந்த எல்லையை நீங்கள் கடந்துவிட்டீர்கள் என ஈரான் அரசாங்கம் அமெரிக்காவை எச்சரித்துள்ளது.

இது குறித்து மேலும் தெரிவிக்கையில், இனி பேச்சுவார்த்தைகளுக்கு இடமில்லை. எங்களிடம் உள்ள அனைத்து வலிமையையும் களமிறக்கும் நேரம் வந்துவிட்டது என ஈரானின் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார்.

தாக்குதல் 

அமெரிக்காவின் தாக்குதல் சிறியதோ, பெரியதோ, திட்டமிட்டதோ அல்லது எதிர்பாராததோ - அது எந்த வடிவத்தில் இருந்தாலும், அதை ஈரான் மீதான நேரடிப் போராகவே கருதுவோம்.

எங்கள் பொறுமைக்கு எல்லை உண்டு! அமெரிக்காவிற்கு ஈரான் விடுத்த பகிரங்க எச்சரிக்கை | Iran S Public Warning To Us

எங்களைத் தீண்டும் ஒவ்வொரு செயலுக்கும் ஈடுகொடுக்க முடியாத அளவிற்கு கடுமையான பதிலடி காத்திருக்கிறது.

தொடர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், ஈரானின் இறையாண்மையைச் சீண்ட நினைப்பவர்களுக்கு ஒரு தெளிவான எச்சரிக்கை, எங்களைத் தாக்கத் துணியும் எவரையும் சிதறடிக்கவும், பிராந்தியத்தின் அதிகாரச் சமநிலையை நிலைநாட்டவும் எங்களிடம் உள்ள அனைத்து ஆயுதங்களையும், வழிகளையும் தயக்கமின்றிப் பயன்படுத்துவோம் என தெரிவித்துள்ளார்.