பழுக்காத பேரீச்சம்பழங்களை உண்ணுங்கள்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், பழுத்த பேரீச்சம்பழங்களுடன் பழுக்காத பேரீச்சம்பழங்களை உண்ணுங்கள்.
புதிய பேரீச்சம்பழங்களுடன் பழைய பேரீச்சம்பழங்களை உண்ணுங்கள். ஏனென்றால் அதைக்கண்டு ஷைத்தான் கோபமுற்று ஆதமுடைய மகன் புதிய பேரீச்சம்பழங்களுடன் பழைய பேரீச்சம்பழங்களை உண்ணுகின்றவரை உயிரோடு இருப்பானே என கூறுவான். இதை ஆயிஷா(ரளி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
மருத்துவர்கள் கூறியதாவது, பழுத்த பேரீச்சம்பழங்களுடன் பழுக்காத பேரீச்சம்பழங்களை உண்ணுமாறுதான் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

செங்காய்களை பேரீச்சம் பழங்களோடு சாப்பிடுமாறு கட்டளையிடவில்லை. ஏனென்றால் பழுக்காத பழங்கள் குளிர்ச்சியானவை காய்வுத்தன்மை உடையவை.
பழுத்த பேரீச்சம்பழமோ சூடான,, நன்மை இருக்கிறது. பழுத்த பேரீச்சம்பழத்தோடு செய்காய்களை சாப்பிடுவதில் அதுபோன்ற நன்மை இல்லை.
ஏனென்றால் அவ்விரண்டுமே சூடான தன்மை உடையவையே ஆகும். மேலும் பேரீச்சம்பழத்தில் சூடான தன்மை சற்று அதிகமே உள்ளது.
மருத்துவ அடிப்படையில் சூடான தன்மை உடைய இரண்டு பொருள்களையோ குளிர்ச்சியான தன்மை உடைய இரண்டு பொருள்களையோ ஒருசேர உண்பது கூடாது, இது ஏற்கனவே கூறப்பட்டுள்ளது.