காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

Sri Lanka Sri Lankan Peoples Eastern Province Weather
By Rakshana MA Nov 30, 2024 05:25 AM GMT
Rakshana MA

Rakshana MA

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த பெங்கல் (Fengal) புயலானது நேற்று (29) பிற்பகல் 11.30 மணியளவில் திருகோணமலைக்கு வடக்காகவும், காங்கேசந்துறைக்கு வடகிழக்காக நிலை கொண்டுள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம்(Department of Meteorology) தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், இன்று (30) திருகோணமலைக்கு வடக்காக ஏறத்தாழ 360 கிலோ மீற்றர் தூரத்திலும், காங்கேசந்துறைக்கு வடகிழக்காக ஏறத்தாழ 280 கிலோ மீற்றர் தூரத்திலும் நிலை கொண்டுள்ளது.

மேலும், மேற்கு - வடமேற்குத் திசையில் நகரக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் நவம்பர் 30ஆம் திகதி பிற்பகலளவில் ஒரு சூறாவளியாக வட தமிழ்நாடு – புதுச்சேரி கரையைக் கடக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கின் வெள்ள அனர்த்தம் தொடர்பில் ஆளுநருடன் கலந்துரையாடிய சிறீதரன்

வடக்கின் வெள்ள அனர்த்தம் தொடர்பில் ஆளுநருடன் கலந்துரையாடிய சிறீதரன்

சூறாவளிக்கான சாத்தியம்

தொடர்ந்தும் நாட்டின் வானிலையில் இத் தொகுதியின் தாக்கம் படிப்படியாக குறைவடைகின்றது.

இதன் தாக்கம் காரணமாக, வடக்கு மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் மேகமூட்டமான வானம் காணப்படுவதுடன் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

அத்துடன் வடக்குமாகாணத்தில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு | Climate Change Announcement In Sri Lanka

தொடர்ந்தும் சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் மேல், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

தங்க விலையில் சடுதியான மாற்றம்

தங்க விலையில் சடுதியான மாற்றம்

பலத்த காற்றுடன் மழை

வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு | Climate Change Announcement In Sri Lanka

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். ஆகவே, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

இலங்கை-இந்திய உறவு: ரணில் விடுத்துள்ள கோரிக்கை

இலங்கை-இந்திய உறவு: ரணில் விடுத்துள்ள கோரிக்கை

அம்பாறையில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து துக்க தினம் அனுஷ்டிப்பு

அம்பாறையில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து துக்க தினம் அனுஷ்டிப்பு

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW