வடக்கின் வெள்ள அனர்த்தம் தொடர்பில் ஆளுநருடன் கலந்துரையாடிய சிறீதரன்
வடக்கின் வெள்ளப் பேரிடர் பாதிப்பு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனை(Nagalingam Vedanayagan) நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
குறித்த சந்திப்பானது இன்று (29) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
கலந்துரையாடல்
வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கான உடனடி உதவிகளை வழங்கல் தொடர்பாகவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்தோடு, காலநிலைத் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு வாழ்வுக்குத் திரும்புவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தல் மற்றும் இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்வதற்கான எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |