காசா அமைதி வாரியம்! கனடா பிரதமருக்கு விடுத்த அழைப்பை திரும்ப பெற்றார் டொனால்ட் ட்ரம்ப்

Donald Trump United States of America Canada
By Fathima Jan 24, 2026 07:38 AM GMT
Fathima

Fathima

காசா அமைதி வாரியத்தில் சேர கனடாவுக்கு விடுத்த அழைப்பை திரும்ப பெறுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக ட்ரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் மார்க் கார்னிக்கு அனுப்பப்பட்ட ஒரு கடிதத்தின் உரையைப் பகிர்ந்தார்.

அந்த பதிவில், எல்லாக் காலத்திலும் ஒன்றுசேர்க்கப்பட்ட தலைசிறந்த தலைவர்கள் வாரியமாக அமையவிருக்கும் அமைதி வாரியத்தில் கனடா இணைவது தொடர்பான உங்களுக்கான அழைப்பை இந்த வாரியம் திரும்பப் பெறுகிறது என்பதை இந்த கடிதம் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

காசா அமைதி வாரியம்

இஸ்ரேல் - பாலஸ்தீனத்தின் காசாவின் ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போரை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மத்தியஸ்தம் செய்து போர் நிறுத்தத்தை கொண்டு வந்தார்.

காசா அமைதி வாரியம்! கனடா பிரதமருக்கு விடுத்த அழைப்பை திரும்ப பெற்றார் டொனால்ட் ட்ரம்ப் | Trump Withdraws Invitation To Canadian Pm

இதற்கிடையே காசாவில் அமைதியை ஏற்படுத்த அமைதி வாரியத்தை தனது தலைமையில் ட்ரம்ப் அமைத்தார். இதில் சேர 60-க்கும் நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார்.

இதற்கிடையே சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடந்த உலக பொருளாதார மன்றத்தில் பங்கேற்ற கனடா பிரதமர் மார்க் கார்னி கூறும்போது, அமெரிக்காவின் தயவால் கனடா வாழவில்லை என்றும் ட்ரம்பின் காசா அமைதி வாரியத்தில் சேர பணம் செலுத்த போவதில்லை என்றும் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் காசா அமைதி வாரியத்தில் சேர கனடாவுக்கு விடுத்த அழைப்பை ட்ரம்ப் திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளார்.