கிளிநொச்சியில் நேருக்கு நேர் மோதிய வாகனங்கள் - ஒருவர் பலி

Kilinochchi Accident Death
By Thevanthan Jan 25, 2026 06:54 AM GMT
Thevanthan

Thevanthan

கிளிநொச்சி - பரந்தன் ஏ35 பிரதான வீதியின் காளி கோயில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

விபத்து

முல்லைத்தீவு பகுதியில் இருந்து பரந்தன் நோக்கி பயணித்த பாராஊர்தி, பரந்தன் பகுதியில் இருந்து விசுவமடு நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியுடன் நேருக்கு நேர் மோதியுள்ளது.

இந்த விபத்து சம்பவத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

விபத்து சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.