ஆட்பதிவுத் திணைக்கள அதிகாரிகளின் மோசமான செயல்!
ஆட்பதிவுத் திணைக்களத்தின் சில ஊழியர்கள், பொதுமக்களின் வரிப்பணத்தை மேலதிக நேரக் கொடுப்பனவு என்ற பெயரில் திட்டமிட்டு மோசடி செய்து வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆட்பதிவுத் திணைக்களத்திற்கு வெளியே அடையாள அட்டைகளைப் பெறுவதற்காக நோய்வாய்ப்பட்டவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
ஆனால், அவர்களுக்குச் சேவை வழங்க வேண்டிய சில ஊழியர்கள், அதிகாலை 5.30 மணியளவில் சாதாரண வீட்டு உடையில் அலுவலகத்திற்கு வருகின்றனர்.
பாதுகாப்புப் பிரிவினருக்கான பிரத்தியேக வாயில் வழியாக உள்ளே நுழையும் இவர்கள், கைரேகை இயந்திரத்தில் தாங்கள் பணிக்கு வந்துவிட்டதாகப் பதிவு செய்கின்றனர்.
கையோடு பதிவு செய்யப்பட்டதன் பின்னர் அவர்கள் மீண்டும் அதே வாயில் வழியாக வெளியேறித் தங்கள் வீடுகளுக்குச் செல்கின்றனர்.
சில ஊழியர்கள் தங்கள் கணவர்களுடன் காரில் வந்து இறங்கி, கைரேகை அடையாளத்தைப் பதிவு செய்துவிட்டு உடனடியாகப் புறப்பட்டுச் செல்வதும் கண்டறியப்பட்டுள்ளது.
பின்னர் காலை 10.00 மணியளவிலேயே இவர்கள் உத்தியோகபூர்வ உடையில் பணிக்குத் திரும்புகின்றனர்.
வேலை செய்யாமலேயே மேலதிக நேரக் கொடுப்பனவைப் பெறும் நோக்கில் இந்த ஊழியர்கள் முன்னெடுக்கும் இச்செயலால், வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்தியுள்ளது.
24 மணி நேர சிசிடிவி கண்காணிப்பு உள்ள வளாகத்தில் இவ்வளவு பெரிய மோசடி நடத்தப்பதாக தெரியவந்துள்ளது.