4,900 அமெரிக்க டொலரைத் தாண்டிய தங்க விலை

Dollars Gold
By Fathima Jan 23, 2026 04:46 AM GMT
Fathima

Fathima

உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக 4,900 அமெரிக்க டொலரைத் தாண்டியுள்ளது.

தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 4,955.74 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது இதுவரை பதிவான அதிகூடிய தங்க விலையாகக் கருதப்படுகிறது.

கோல்ட்மேன் சாக்ஸ் 

இதற்கிடையில், முன்னணி முதலீட்டு வங்கியான கோல்ட்மேன் சாக்ஸ் (Goldman Sachs), இந்த ஆண்டு இறுதிக்குள் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 5,400 அமெரிக்க டொலர் வரை உயரக்கூடும் என்று கணித்துள்ளது.

4,900 அமெரிக்க டொலரைத் தாண்டிய தங்க விலை | Gold Price Hits Record High 4900 Usd Market Today

இதன் காரணமாக, இன்று உள்நாட்டு சந்தையிலும் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை எதிர்பார்க்கலாம் என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.