ஜப்பான் ஏர்லைன்ஸ் மீது சைபர் தாக்குதல்
ஜப்பான்(Japan) விமான நிலையம் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பல விமான போக்குவரத்துக்கள் தாமதமடையலாம் என வெளிநாட்டு ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன.
இடைநிறுத்தப்பட்ட டிக்கட் சேவை
உள்ளூர் நேரப்படி காலை 10:00 மணி சுமார் 7:30 மணியளவில் விமானத்தின் வெளிப்புற அமைப்புகளுடன் தொடர்பு கொள்ளும் அமைப்புகளில் கோளாறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பில் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்ததாவது,
"பாதிப்பின் அளவை நாங்கள் கண்டறிந்துள்ளோம், விரைவில் அதை மீட்டெடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்" என்று தெரிவித்துள்ளனர்.
அத்துடன் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், வியாழக்கிழமை திட்டமிடப்பட்ட அனைத்து சேவைகளுக்கும் டிக்கெட் விற்பனை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் விமான நிலைய அதிகாரிகள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |