இலங்கை தபால் சேவைகளை நவீன மயமாக்க அரசாங்கம் திட்டம்

Sri Lanka Government Of Sri Lanka Nalinda Jayatissa
By Laksi Dec 26, 2024 06:08 AM GMT
Laksi

Laksi

இலங்கை தபால் திணைக்கள சேவையை  நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதிய மாற்றங்களுடன்  உருவாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக  அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.

 இலங்கை தபால் தலைமையகத்தின் தற்போதைய சேவை நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பில், தபால் திணைக்கள அதிகாரிகளுடன் சுகாதார அமைச்சில் நேற்றுமுன்தினம் (24) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது தபால் சேவையில் நிலவிவரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதுடன், வரலாற்றுச் சிறப்பு மிக்க இச்சேவையை நவீனமயப்படுத்தி தேசிய சேவையாக தரம் உயர்த்துவதே புதிய அரசாங்கத்தின் நோக்கமாகும்.

மாளிகைக்காடு ஜும்ஆ பள்ளிவாசலில் சுனாமி நினைவு தின துஆ பிரார்த்தனை

மாளிகைக்காடு ஜும்ஆ பள்ளிவாசலில் சுனாமி நினைவு தின துஆ பிரார்த்தனை

தபால் சேவை

விசேடமாக அரசியல் அல்லது தனிப்பட்ட தேவைகளை முன்னிறுத்தி புதிய தபால் நிலையங்களை நிறுவும் செயற்பாடு இனி ஒருபோதும் இடம்பெறாது.

இலங்கை தபால் சேவைகளை நவீன மயமாக்க அரசாங்கம் திட்டம் | Government Plans To Modernize Sl Postal Services

தபால் சேவை தொடர்பான எதிர்காலத் திட்டங்கள் குறைந்தபட்சம் அடுத்த 10 ஆண்டுகளை உள்ளடக்கிய வகையில் ஒழுங்கமைக்கப்பட வேண்டும்.

அம்பாறையில் கடலில் நீராட சென்ற மூவர் மாயம்

அம்பாறையில் கடலில் நீராட சென்ற மூவர் மாயம்

சுற்றுலாத் துறை

உரிய புரிதலுடன் அதிகாரிகளும் இத்திட்டத்தை செயற்படுத்துவது அவசியம். குறிப்பாக சுற்றுலாத் துறையில் கவனம் செலுத்தி அதிக இலாபம் ஈட்டும் நிறுவனத்தை கட்டியெழுப்புவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டும்.

இலங்கை தபால் சேவைகளை நவீன மயமாக்க அரசாங்கம் திட்டம் | Government Plans To Modernize Sl Postal Services

வெளிநாட்டு உதவிகளை பெறும் நோக்கில் திட்டங்களை ஒழுங்கமைப்பது அவசியம். ஆகையால் தனியார் நிறுவனங்களுடன் போட்டியிடும் வகையில் திணைக்களத்தின் வருமான ஆதாரங்கள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். என்றார்.

குருநாகல் துப்பாக்கிச்சூடு விவகாரம்: சந்தேக நபர் தொடர்பில் பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்

குருநாகல் துப்பாக்கிச்சூடு விவகாரம்: சந்தேக நபர் தொடர்பில் பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்