குருநாகல் துப்பாக்கிச்சூடு விவகாரம்: சந்தேக நபர் தொடர்பில் பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்
குருநாகல் - வெல்லவ(Wellawa) பிரதேசத்தில் 32 வயதான வர்த்தகர் சுமித் பிரசன்ன சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
சூரிய மின்கலங்கள் பொருத்தும் தொழிலை நடத்தி வந்த பிரசன்னா என்பவர் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதுடன், அவரது மனைவி படுகாயமடைந்து குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
விசாரணை
அடையாளம் தெரியாத நபர் ஒருவரால், வீட்டின் முன்னால் உள்ள மாமரத்தில் இருந்து T-56 துப்பாக்கியை பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து பிரசன்னாவை நோக்கி சந்தேக நபர் நான்கு முறையும், அவரது மனைவி மீது ஒரு முறையும் துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
மேலும், தம்பதியினர் சமீபத்தில் புதிய வீட்டிற்கு குடிபெயர்ந்துள்ளனர் என தெரியவந்துள்ளது. அத்துடன் வணிக தகராறு காரணமாக இந்த தாக்குதல் நடந்திருக்கலாம் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்தும் இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |