சம்மாந்துறையில் முன்னெடுக்கப்பட்ட கிளீன் ஸ்ரீ லங்கா திட்டம்
இலங்கை அரசாங்கத்தால் ஆரம்பித்து வைக்கப்பட்ட கிளீன் ஸ்ரீ லங்கா (Clean Sri Lanka) வேலைத்திட்டத்தின் தொடர்ச்சியாக இன்று(26) சம்மாந்துறை பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் ஆரம்ப கட்ட தூய்மையாக்கும் பணியானது, சம்மாந்துறை கல்லரிச்சல் பொட்டியர் சந்தியில் இருந்து இடம்பெற்றுள்ளது.
இதன்படி, Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் கீழ் சம்மாந்துறை பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட மூன்று இடங்களில் சிரமதான நிகழ்வு நடைபெற்றுள்ளன.
கிளீன் ஸ்ரீலங்கா
குறிப்பாக சம்மாந்துறை மஸ்ஜிதுல் உம்மாவினை அண்மித்த பிரதேசம், அல் மர்ஜான் பாடசாலை அருகாமையில் போன்ற இடங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கிராமிய அபிவிருத்தி சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |



