ஜம்மியத்துல் உலமாவுடன் சந்திப்பை நடத்திய சர்வஜன அதிகாரம் கட்சி

Sri Lanka Politician Sri Lankan Peoples Current Political Scenario
By Rakshana MA Feb 26, 2025 10:07 AM GMT
Rakshana MA

Rakshana MA

நாட்டில் உள்ள அனைத்து சமூகங்களுடனும் இணைந்து இன மற்றும் மத ஒற்றுமையுடன் பணியாற்றுவதன் மூலம், தேசிய ஒற்றுமையை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை, சர்வஜன அதிகாரம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜெயவீர (Dilith Jayaweera) வலியுறுத்தியுள்ளார்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அமைப்பின் பிரதிநிதிகளுடன் நேற்று(25) நடைபெற்ற கலந்துரையாடலுக்குப் பின்னர் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

மட்டக்களப்பில் திடீர் சோதனை நடவடிக்கை : முற்றுகையிடப்பட்ட உணவகங்கள்

மட்டக்களப்பில் திடீர் சோதனை நடவடிக்கை : முற்றுகையிடப்பட்ட உணவகங்கள்

ஜம்மியத்துல் உலமாவுடன் சந்திப்பு

பல்வேறு அரசியல் கட்சிகள் 'சகவாழ்வு' என்ற வார்த்தையை தங்கள் சொந்த நலனுக்காகப் பயன்படுத்துகின்றன. சமூகங்களிடையே நல்லிணக்கத்தை வளர்ப்பதாகக் கூறுகின்றன. இருப்பினும், சகவாழ்வுக்கான வெளிநாட்டுக் கருத்துக்களை இறக்குமதி செய்வதன் மூலம் இலங்கையர்கள் முன்னேற முடியாது.

அதற்கு பதிலாக, தேசிய அடையாளம், இலங்கை நாகரிகத்தின் மீது கட்டமைக்கப்பட வேண்டும், இதற்காக அனைத்து இனக்குழுக்களும் மரியாதை மற்றும் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும்.

ஜம்மியத்துல் உலமாவுடன் சந்திப்பை நடத்திய சர்வஜன அதிகாரம் கட்சி | Jam E Athul Ulama Meeting With Sarvajana Balaya

எனவே இலங்கையில் தேசிய மற்றும் மத நல்லிணக்கம் குறித்த திறந்த விவாதங்களில் ஈடுபடுவதற்கு தாம் உறுதி பூண்டுள்ளோம் என சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், சகவாழ்வு என்ற கருத்தை வெவ்வேறு அரசியல் கட்சிகள் எவ்வாறு விளக்குகின்றன மற்றும் பயன்படுத்துகின்றன என்பது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து, மிகவும் பயனுள்ள கலந்துரையாடலை நடத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வீழ்ச்சியடையும் அமெரிக்க டொலரின் பெறுமதி

வீழ்ச்சியடையும் அமெரிக்க டொலரின் பெறுமதி

கடும் வெப்பத்தால் 7000இற்கும் அதிகமானோர் பாதிப்பு

கடும் வெப்பத்தால் 7000இற்கும் அதிகமானோர் பாதிப்பு

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW