அரசாங்க சேவைகள் குறித்து ஜனாதிபதியின் புதிய திட்டம்

Anura Kumara Dissanayaka Government Employee Sri Lankan Peoples Presidential Update
By Rakshana MA Feb 26, 2025 06:18 AM GMT
Rakshana MA

Rakshana MA

அரசாங்க சேவைகள் தொடர்பில் மக்கள் மத்தியில் நல்லதொரு எண்ணம் காணப்படாமைக்கு அரச சேவைக்குள் காணப்படும் வினைத்திறன் இன்மையே காரணமென ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அமைச்சுக்களின் செயலாளர்களுடன் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று(25) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், 

அரச ஊழியர்களிடையே காணப்படும் திருப்தியின்மையே வினைத்திறன் இல்லாமைக்கு காரணமாக அமைந்துள்ளதெனவும், அந்த பிரச்சினைகளை தீர்த்து அரச சேவையின் வினைத்திறனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

இணைய வழி பணப்பறிமாற்றங்களை மேற்கொள்வோருக்கு வெளியான தகவல்

இணைய வழி பணப்பறிமாற்றங்களை மேற்கொள்வோருக்கு வெளியான தகவல்

வலியுறுத்தப்பட வேண்டிய விடயம் 

அதன்படி வரையறுக்கப்பட்ட நிதிக் கட்டமைப்புக்குள் இருந்தாலும் அபிவிருத்தி மற்றும் மக்களின் தேவைகளை அறிந்துகொண்டு இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடுகள் செய்யப்பட்டிருப்பதால், அந்த நிதியை வினைத்திறனாகவும், பயனுள்ள மற்றும் நியாயமான முறையில் பயன்படுத்துவது அரசாங்க அதிகாரிகளின் பொறுப்பாகும்.

அரசாங்க சேவைகள் குறித்து ஜனாதிபதியின் புதிய திட்டம் | Idea For Increace Efficiency Of Services By Anura

அத்துடன், செலவு முகாமைத்துவத்தின் போது அரசாங்க அதிகாரிகள் உரிய பொறுப்புடன் செயலாற்ற வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட வேண்டும்.

ஜனாதிபதி மற்றும் அமைச்சரவை உள்ளிட்ட அரசியல் அதிகார தரப்பும் செலவுகளை குறைத்திருக்கும் நிலையில், அரச நிறுவனங்களின் நிர்வாகச் செலவை குறைத்தல் மற்றும் விரயத்தை குறைத்தல் என்பன அரச சேவையின் பொறுப்பாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இதன்போது அரச சேவையின் செலவுகளை குறைப்பதற்காக அரசாங்க அலுவலகங்கள் அனைத்தையும் அரசாங்க கட்டடங்களுக்கு கொண்டு வருதல், அதிக பராமரிப்புச் செலவுடன் கூடிய வாகனங்களை மார்ச் மாதமளவில் ஏல விற்பனை செய்யும் திட்டம், பாவனை செய்யாத அலுவலக உபகரணங்களை ஒதுக்குதல், மூடப்பட வேண்டிய நிறுவனங்கள், ஒருங்கிணைக்கப்பட வேண்டிய நிறுவனங்கள் மற்றும் அரச, தனியார் கூட்டிணைவுக்கு வழங்க வேண்டிய நிறுவனங்களை அறிந்துகொண்டு அதற்காக மேற்கொள்ள வேண்டிய துரித நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

அரசாங்க சேவைகள் குறித்து ஜனாதிபதியின் புதிய திட்டம் | Idea For Increace Efficiency Of Services By Anura

அத்துடன், ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க, பிரதமரின் செயலாளர் ஜீ.பீ.சபுதந்திரி உள்ளிட்டவர்களும் இதன்போது கலந்துகொண்டனர்.

சில மாகாணங்களில் ஏற்படவுள்ள வானிலை மாற்றம்

சில மாகாணங்களில் ஏற்படவுள்ள வானிலை மாற்றம்

இலங்கையில் 5 மாகாணங்களில் சைபர் குற்றப் புலனாய்வுப் பிரிவு

இலங்கையில் 5 மாகாணங்களில் சைபர் குற்றப் புலனாய்வுப் பிரிவு

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
Gallery