இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகளின் நடவடிக்கைகளை அங்கீகரிப்பதாக அறிவித்துள்ள பிரித்தானியா

United Nations Sri Lanka Sri Lankan Peoples
By Sivaa Mayuri Sep 10, 2024 06:13 AM GMT
Sivaa Mayuri

Sivaa Mayuri

Courtesy: Sivaa Mayuri

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகத்தின் அறிக்கையை பிரித்தானியா அங்கீகரித்துள்ளது.

அத்துடன், இலங்கையின் மனித உரிமைகள் போக்குகள் குறித்த ஐக்கிய நாடுகளின் கவலையைப் பகிர்ந்து கொள்வதாகவும் பிரித்தானியா தெரிவித்துள்ளது

இலங்கையில் ஆயுத மோதல்கள் முடிவடைந்து பதினைந்து வருடங்களாகியும், மோதல் கால மீறல்கள் மற்றும் துஸ்பிரயோகங்களுக்கு பொறுப்புக்கூறல் எதுவும் இல்லை. இலங்கையில் காணாமல் போன ஆயிரக்கணக்கானோர் எங்கிருக்கிறார்கள் என்ற விபரம் தெரியவில்லை.

சாய்ந்தமருதில் ஐக்கிய மக்கள் சக்தியின் காரியாலயம் திறந்து வைப்பு

சாய்ந்தமருதில் ஐக்கிய மக்கள் சக்தியின் காரியாலயம் திறந்து வைப்பு

சுயாதீன விசாரணை

இதனால் அவர்களது குடும்பத்தினர் தொடர்ந்து வேதனை அடைந்துள்ளனர்.

எனவே பாதிக்கப்பட்ட சமூகங்களின் ஆதரவைக் கொண்ட ஒரு விரிவான நிலைமாறுகால நீதி செயல்முறை முன்னெப்போதையும் விட மிகவும் அவசியமாகியுள்ளது.

இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகளின் நடவடிக்கைகளை அங்கீகரிப்பதாக அறிவித்துள்ள பிரித்தானியா | Britain Announces Approval Un Action Against Sl

இந்தநிலையில் கடத்தல்கள், தன்னிச்சையான தடுப்புக்காவல்கள், சித்திரவதைகள் மற்றும் வலுக்கட்டாயமாக காணாமல் போனோர் பற்றிய அனைத்து அறிக்கைகள் உட்பட்ட மனிதவுரிமை மீறல்கள் குறித்து சுயாதீன விசாரணைகளை தாம் கோருவதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு ஆதரவு

அனைத்து இலங்கையர்களின் மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்கள் மதிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள பிரித்தானியா, சிவில் சமூகம், பாதிக்கப்பட்ட சமூகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோர் துன்புறுத்தப்படுகின்றனர் இது தேசிய நல்லிணக்கம் மற்றும் எதிர்காலத்தில் அமைதியான சமூகத்தை கட்டியெழுப்புவதில் இலங்கையின் முக்கிய பங்கைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்று தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகளின் நடவடிக்கைகளை அங்கீகரிப்பதாக அறிவித்துள்ள பிரித்தானியா | Britain Announces Approval Un Action Against Sl

ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களைத் தொடர்ந்து, நம்பிக்கையை கட்டியெழுப்புதல் மற்றும் நிலைமாறுகால நீதி செயல்முறைகள் உட்பட மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கு, இலங்கை அரசாங்கம் முன்னுரிமை அளிக்கும் என்று நம்புவதாக பிரித்தானியா குறிப்பிட்டுள்ளது.

எனினும் அந்த முயற்சிகள், பாரபட்சமற்றதாகவும், சுதந்திரமானதாகவும்,வெளிப்படையானதாகவும், அர்த்தமுள்ள பொறுப்புக்கூறலை வழங்குவதாகவும் இருக்க வேண்டும்.

இந்த சவால்களை எதிர்கொள்ள, இலங்கைக்கு ஆதரவளிக்க தயாராக உள்ளது என்றும் பிரித்தானியா குறிப்பிட்டுள்ளது.  

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி

ரணிலை பகிரங்க விவாதத்துக்கு அழைக்கும் அநுர!

ரணிலை பகிரங்க விவாதத்துக்கு அழைக்கும் அநுர!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW