சாய்ந்தமருதில் ஐக்கிய மக்கள் சக்தியின் காரியாலயம் திறந்து வைப்பு
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் சாய்ந்தமருது காரியாலய திறப்பு விழாவும் மக்கள் சந்திப்பும் இடம்பெற்றுள்ளது.
குறித்த திறப்பு விழாவானது கடந்த 08.09.2024 அன்று சாய்ந்தமருது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி சபை வேட்பாளரும் ,அம்பாறை மாவட்ட செயற்குழு உறுப்பினருமான எம்.எம்.எம்.பாமினின் தலைமையில் சாய்ந்தமருது காரியாலயத்தில் நடைபெற்றுள்ளது.
பலர் பங்கேற்பு
இந்த நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மேலும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச் எம் எம் ஹரிஸ், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளருமான எம் எஸ் உதுமாலெப்பை, கட்சியின் பொருளாளரும் உயர் பீட உறுப்பினருமான ரஹ்மத் மன்சூர், கட்சியின் உயர்பீட உறுப்பினரும், சாய்ந்தமருது அமைப்பாளருமான எம் ஐ பிர்தௌஸ், அம்பாறை மாவட்ட செயற்குழு செயலாளரும், கல்முனை மாநகர சபை முன்னாள் பிரதி மேயர், சாய்ந்தமருது மத்திய குழு உறுப்பினர்கள், கல்விமான்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |