ரணிலை பகிரங்க விவாதத்துக்கு அழைக்கும் அநுர!
தம்முடன் பகிரங்க விவாதத்துக்கு வருமாறு, தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க, சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு சவால் விடுத்துள்ளார்
புத்தளம் ஆனமடுவவில் இடம்பெற்ற பேரணியின் போதே அவர் இந்த அழைப்பை விடுத்தார் இதன்போது எதிர்வரும் தேர்தலில் விக்கிரமசிங்கவின் தோல்வி உறுதி என அநுரகுமார திஸாநாயக்க அறிவித்துள்ளார்.
இந்தநிலையில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கிராமங்களில் அவருக்கு ஆதரவு இல்லை என்று அநுரகுமார குறிப்பிட்டுள்ளார்.
பொது விவாதம்
ராஜபக்சர்களை திருடர்கள் என்று ரணில் விக்கிரமசிங்க அழைத்தார்.
அதேநேரம் அவர் சொன்னது தினேஸ் குணவர்தன ரணிலைத் திருடன் என்று கூறினார் அவர்கள் இருவரும் ரோயல் கல்லூரியில் வகுப்புத் தோழர்கள் என்ற வகையில் தினேஸ் கூறியது பொய்யா என்று அநுரகுமார கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தநிலையில் தாமும் ரணில் விக்கிரமசிங்கவும் வெவ்வேறு இடங்களில் வாதங்களை முன்வைக்காமல், பொது விவாதம் ஒன்றுக்கு வரும்போது, ஒருவருக்கொருவர் கேள்விகளை கேட்டு அதற்கான விடையை தெரிந்;துக்கொள்ளமுடியும் என்று அநுரகுமார தெரிவித்துள்ளார்
இதேவேளை விக்கிரமசிங்க மன அழுத்தத்தில் உள்ளதாக தெரிவித்துள்ள அநுரகுமார, செப்டம்பர் 21 இல், அவர் ராஜினாமா செய்வார் என்றும், "ஜனாதிபதி ரணில்” என்ற தலைப்பு விரைவில் "முன்னாள் ஜனாதிபதி" என்று மாற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |