காலி முகத்திடலில் காட்சிப்படுத்திய வாகனங்களுக்கு என்ன ஆனது..
107 வாகனங்களை காட்சிப்படுத்திய அரசாங்கம் வெறும் 18 வாகனங்களை மட்டுமே ஏலத்தில் விற்பனை செய்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சித்ரால் பெர்னாண்டோவினால் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அரசாங்கம் ஆடம்பர வாகனங்களை ஏலத்தில் விற்பனை செய்வதாக கூறிய போதிலும் சொற்ப எண்ணிக்கையிலான வாகனங்கள் மட்டுமே இவ்வாறு ஏலத்தில் விற்பனை செய்யப்படுவதாக குறிப்பிட்டுள்ளது.
ஏல விற்பனை
கடந்த அரசாங்கத்தினால் மக்களின் பணம் விரயமாக்கப்பட்டதாகவும் ஆடம்பர வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் தற்போதைய அரசாங்கம் குற்றம் சுமத்தியிருந்தது.
கடந்த அரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்திய 107 ஆடம்பர வாகனங்கள் காலி முகத்திடலில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
எனினும் இவ்வாறு காட்சிப்படுத்திய வாகனங்களில் 18 வாகனங்கள் மட்டுமே ஏலத்தில் விற்பனை செய்யப்படுவதாக சித்ரால் பெர்னாண்டோ குற்றம் சுமத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |