தனியார்துறை சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான அதிருப்தி
அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட, தனியார் துறை ஊழியர்களுக்கான சம்பள உயர்வு திட்டம் தொடர்பில் இலங்கை ஐக்கிய தேசிய வணிகக் கூட்டணி, அதிருப்தி தெரிவித்துள்ளது.
இதற்கமைய, அத்தகைய அதிகரிப்பு தற்போது சாத்தியமில்லை என்று இலங்கை ஐக்கிய தேசிய வணிகக் கூட்டணி சுட்டிக்காட்டியுள்ளது.
சம்பள உயர்வு
இது தொடர்பில் சங்கத்தின் தலைவர் டானியா அபேசுந்தர கருத்து தெரிவிக்கையில்,
சம்பள உயர்வைச் செயல்படுத்துவதற்கு முன்னர், வணிகங்கள் நிதி நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு கால அவகாசம் தேவை.
இந்த நிலையில், அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது மிகவும் நல்ல விடயமாகும்.
எனினும், தனியார் துறையையும் அதனை நடைமுறைப்படுத்தவேண்டும் என்று கூறும்போது, அது தொடர்பில் அரசாங்கம் சிந்திப்பது சிறப்பாக இருக்கும்.
தனியார் துறை
தனியார்துறை சம்பளத்தை 21,000 ரூபாயாக ஆக உயர்த்தும்போது, அங்கே 6,000 ரூபாய் வித்தியாசம் உள்ளது. அத்துடன் 50-60 மணிநேரங்களுக்கு மேலதிக நேரக்கொடுப்பனவுகள் உள்ளன.
இதன்போது, ஒரு மணி நேரத்திற்கு 210 ரூபாயை செலுத்தப்படுகிறது. எனவே, 15,000 அடிப்படை சம்பளத்தை அதிகரிக்க கோருவது, தொழில்முனைவோராகிய தமக்கு மிகவும் கடினமான விடயம் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |