யாசகர்கள் தொடர்பில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை

Sri Lanka Government Of Sri Lanka Sri Lankan Peoples
By Rukshy Apr 07, 2025 02:41 AM GMT
Rukshy

Rukshy

பல்வேறு இடங்களிலும், சாலை மற்றும் மின்சார சமிக்ஞைகளுக்கு அருகிலும் யாசகம் பெறுபவர்களை அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

இந்த யாசகர்கள் மற்றும் சாலையோர வியாபாரிகளின் நடத்தை, நகரங்களில் போக்குவரத்தை சீர்குலைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பில் மகனால் தாக்கப்பட்ட தாய் மரணம்!

மட்டக்களப்பில் மகனால் தாக்கப்பட்ட தாய் மரணம்!

குழந்தைகளை வைத்து யாசகம்...  

எனவே, இது தொடர்பாக அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

யாசகர்கள் தொடர்பில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை | Action To Be Taken Against Beggars

மேலும், அந்த இடங்களில் பணியில் இருக்கும் சில பொலிஸ் அதிகாரிகள், குறித்த யாசகர்கள் மற்றும் சாலையோர வியாபாரிகளின் நடத்தை குறித்து கவலைப்படுவதில்லை என்றும் சுற்றறிக்கை கூறுகிறது.

அத்துடன், சில யாசகர்கள் பொதுமக்களின் அனுதாபத்தைப் பெறுவதற்காக இளம் குழந்தைகளுக்கு போதைப்பொருள் கொடுத்து, அவர்களை யாசகம் பெற அழைத்துச் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திருகோணமலையில் மீட்கப்பட்டுள்ள T-56 துப்பாக்கி : தீவிரமாகும் விசாரணை

திருகோணமலையில் மீட்கப்பட்டுள்ள T-56 துப்பாக்கி : தீவிரமாகும் விசாரணை

மாற்றத்தை விரும்பும் அக்கரைப்பற்று பிரதேச சபை!

மாற்றத்தை விரும்பும் அக்கரைப்பற்று பிரதேச சபை!

     நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW