திருகோணமலையில் மீட்கப்பட்டுள்ள T-56 துப்பாக்கி : தீவிரமாகும் விசாரணை
திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமத்தில் அமைந்துள்ள முள்ளிப்பொத்தானை (Mullippoththanai) பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈச்சநகர் பகுதியில் அமைந்துள்ள குளத்தில் T-56 வகை துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று(06) காலை சுமார் 6.30 மணியளவில், சூரியபுர விசேட பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த பகுதிக்கு சென்று தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தீவிர விசாரணை
இதன் போது, குறித்த பிரதேசத்திலுள்ள குளத்தின் கரையில், நிலத்தில் புதைத்த நிலையில் T-56 ரக துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது இந்த துப்பாக்கி எவ்வாறு இப்பகுதிக்கு வந்தது, யார் வைத்திருந்தார்கள் என்பதைத் தெளிவுபடுத்தும் வகையில் தம்பலகாமம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
