இன்று முதல் அனைத்து தபால் ஊழியர்களுக்குமான விடுமுறைகள் இரத்து!

Election Commission of Sri Lanka Local government Election Sri lanka Post
By Rakshana MA Apr 06, 2025 09:11 AM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கையிலுள்ள அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறைகளும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நிறைவடையும் வரையும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.

அதன்படி, இன்று (06) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் விடுமுறைகள் இரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலானது எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க (R.M.A.L. Rathnayake) தெரிவித்துள்ளார்.

இலங்கையிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தொர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

இலங்கையிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தொர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

விடுமுறை இரத்துக்கான காரணம் 

தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளதாலேயே குறித்த விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

இன்று முதல் அனைத்து தபால் ஊழியர்களுக்குமான விடுமுறைகள் இரத்து! | Postal Workers Leave Cancelled Sl

இதன்படி, உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் 16 ஆம் திகதி தபால் நிலையத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன், ஏப்ரல் 20 ஆம் திகதி விசேட வாக்காளர் அட்டை விநியோக நாளாகக் கருதப்படும்.

மேலும், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 22, 23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் நடைபெற உள்ளது.

குறித்த நாட்களில் வாக்களிக்க முடியாத அரச பணியாளர்களுக்காக ஏப்ரல் 28 மற்றும் 29 ஆகிய திகதி மேலதிக நாட்களாக ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேருந்து மோதியதில் பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு

பேருந்து மோதியதில் பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு

சாய்ந்தமருது பிரதேசத்தில் தொற்றா நோய்ப் பரிசோதனை முன்னெடுப்பு

சாய்ந்தமருது பிரதேசத்தில் தொற்றா நோய்ப் பரிசோதனை முன்னெடுப்பு

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW